/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செக் மோசடி செய்தவருக்கு 10 மாதம் சிறை தண்டனை
/
செக் மோசடி செய்தவருக்கு 10 மாதம் சிறை தண்டனை
ADDED : மே 18, 2024 06:20 AM
திருக்கோவிலுார்: செக் மோசடி செய்தவருக்கு திருக்கோவிலுார் கோர்ட்டில், 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் அகண்டானந்தம் மனைவி பரமேஸ்வரி,35; இவரிடம் ஜி.அரியூரை சேர்ந்த அரசன் மகன் வீரன், 40; ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
இந்த தொகைக்கான செக்கை கடந்த 2019ம் ஆண்டு பரமேஸ்வரியிடம் கொடுத்தார். அந்த செக்கை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை என திரும்பியது.
அதன் பிற்கு, வீரனிடம் பலமுறை பணம் கேட்டும் கொடுக்காததால் பரமேஸ்வரி திருக்கோவிலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் குமார், பணம் வாங்கி, வெற்று செக் கொடுத்து ஏமாற்றிய வீரனுக்கு 10 மாதம் சிறை தண்டனை மற்றும் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.13.8 லட்சத்தை பரமேஸ்வரிக்கு திருப்பி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த வழக்கில் கோர்ட்டில் பொய் சாட்சியம் அளித்ததற்காக வீரன் மீது வழக்குப் பதிவு செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இவர், போலி வழக்கறிஞராக பணியாற்றியதாக திருக்கோவிலுார் போலீசார் கடந்த 2022ம் ஆண்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

