/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்வாயில் லாரி கவிழ்ந்து 10 டன் சர்க்கரை சேதம்
/
கால்வாயில் லாரி கவிழ்ந்து 10 டன் சர்க்கரை சேதம்
ADDED : ஆக 11, 2024 04:56 AM

கடலுார் : கடலுாரில் கழிவுநீர் கால்வாயில் லாரி கவிழ்ந்து, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 10 டன் சர்க்கரை சேதமானது:
ஈரோட்டில் இருந்து 10 டன் சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, நேற்று அதிகாலை கடலுார் வழியாக புதுச்சேரி நோக்கி சென்றது. ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 59; லாரியை ஓட்டிச் சென்றார். பச்சையாங்குப்பம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர கழிவுநீர் கால்வாயில் கவிழ்ந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் லாரியில் சிக்கிய டிரைவர் கோபாலகிருஷ்ணனை மீட்டனர். அவர் காயமின்றி தப்பினார்.
லாரியில் கழிவுநீர் நிரம்பியதால், அதில் இருந்த 10 டன் சர்க்கரை சேதமடைந்தது. அதன்மதிப்பு ரூ. 4 லட்சம் என, கூறப்படுகிறது.
தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார் லாரியை கிரேன் மூலம் மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

