/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுாறு சதவீத ஓட்டுப்பதிவு; மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்
/
நுாறு சதவீத ஓட்டுப்பதிவு; மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்
நுாறு சதவீத ஓட்டுப்பதிவு; மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்
நுாறு சதவீத ஓட்டுப்பதிவு; மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்
ADDED : மார் 23, 2024 06:00 AM

கடலுார்: கடலுாரில் லோக் சபா தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கடலுார் டவுன் ஹாலில் துவங்கிய ஊர்வலத்தை, கலெக்டர் அருண் தம்புராஜ் துவக்கி வைத்தார். பின், மூவர்ணத்தில் உள்ள பலுான்களை பறக்க விட்டார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
டவுன் ஹாலில் இருந்து பாரதி சாலை வழியாக உழவர் சந்தை வரை மாற்றுத்திறனாளிகள் சென்றனர்.
இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
அப்போது, மகளிர் திட்ட இயக்குனர் சுருதி, சமூக நலத்துறை அலுவலர் கோமதி, மாற்றுத்திறனாளி அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியார் நிறுவனத்திடம் இருந்து ெஹல்மெட் வழங்கப்பட்டது.
பின், ஊர்வலம் முடிந்தவுடன் அந்நிறுவனத்தினர் மீண்டும் ெஹல்மெட்டை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றதால், மாற்றுத்திறனாளிகளிடம் முகம் சுளித்தனர்.
சிதம்பரம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அறிவியில் புலம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிர்வாக அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை துணை வேந்தர் கதிரேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், பல்வேறு துறையை சார்ந்த 1200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, நிர்வாக அலுவலக கட்டிடத்திலிருந்து புறப்பட்டு, அண்ணாமலை நகர் தபால் நிலையம் வரை சென்றனர். நிகழ்ச்சியில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், அறிவியல் புலமுதல்வர் ராக்கப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

