/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
1,057 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் பூட்டி சீல் வைப்பு
/
1,057 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் பூட்டி சீல் வைப்பு
1,057 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் பூட்டி சீல் வைப்பு
1,057 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் பூட்டி சீல் வைப்பு
ADDED : மார் 23, 2024 11:56 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்கு தேவையான 1,057 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஸ்டிராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டன.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் 286 ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இங்கு, ஓட்டுப்பதிவுக்கு தேவையான 343 பேலட் யூனிட், 343 கன்ட்ரோல் யூனிட் மற்றும் ஓட்டுப்பதிவு சரிபார்க்கும் விவிபாட் 371 உட்பட 1,057 இயந்திரங்கள் 2 வேன்களில் நேற்று விருத்தாசலம் கொண்டு வரப்பட்டன.
ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், தாசில்தார் உதயகுமார், துணை தாசில்தார் கோவிந்தன் தலைமையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.
மந்தாரக்குப்பம்
கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட நெய்வேலி சட்டசபை தொகுதிக்கான மின்னணு ஒட்டு பதிவு இயந்திரங்கள், நெய்வேலியில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அலுலகத்தில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று காலை ஸ்டிராங் ரூமில் வைத்து 'சீல்' வைக்கப்பட்டது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஸ்டிராங் ரூமிற்கு சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுார்
முன்னதாக கடலுார் மற்றும் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட 9 சட்ட சட்டசபை தொகுதிகளுக்குத் தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் அருண்தம்புராஜ், ஸ்டாராங் ரூமில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரி பார்ப்பு செய்து அனுப்பி வைத்தார்.
மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகத்திற்கும் 8,250 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

