/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 1,425 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
/
மாவட்டத்தில் 1,425 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED : செப் 08, 2024 06:13 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கடலுாரில் வண்ணாரப்பாளையம் சந்திப்பு, திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், செம்மண்டலம் உள்ளிட்ட 205 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, மாவட்டத்தில் சிதம்பரம் 170, விருத்தாசலம் 160, நெய்வேலி 215, பண்ருட்டி 350, திட்டக்குடி பகுதிகளில் 160 என, மாவட்டத்தில் 1,425 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதனை ஆன்மிக அமைப்புகள் மற்றும் இந்து முன்னணியினர் சார்பில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி எஸ்.பி., ராஜாராம் மேற்பார்வையில் 1,850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.