/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் இரு தரப்பு மோதலில் 15 பேர் காயம்
/
கடலுாரில் இரு தரப்பு மோதலில் 15 பேர் காயம்
ADDED : மார் 28, 2024 04:21 AM

கடலுார் : கடலுார் அருகே, திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் காயமடைந்தனர். பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடலுார் அடுத்த சாலைக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில், பில்லாலி தொட்டி பெரிய காலனியைச் சேர்ந்த ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
இரவு 11:00 மணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த பில்லாலி தொட்டி பெரிய காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
பின், இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மண்டபத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 தனியார் பஸ் கண்ணாடி, 3 பைக்குகள் மீது கல்வீசி சேதப்படுத்தப்பட்டது.
இந்த மோதலில், திருமண வரவேற்பிற்கு வந்த பெண் வீட்டார் தரப்பினரான கோட்டக்குப்பத்தை சேர்ந்த மாலதி, 45; உட்பட 15 பேர் காயமடைந்து, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்த எஸ்.பி., ராஜாராம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், இரு பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

