தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா விற்பனை 2 பேர் கைது 

கஞ்சா விற்பனை 2 பேர் கைது 

கஞ்சா விற்பனை 2 பேர் கைது 


ADDED : ஜூலை 11, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார் கோவிலில், கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் அதிக அளவு கஞ்சா விற்பனை இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., சிறப்பு அதிரடிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

தைக்கால் வாரச்சந்தை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த, காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடி ஜாகீர்உசேன் நகர் நஜீர்அகமது மகன் முகமது யூசப் அலி 23; லால்பேட்டை மெயின்ரோடு ராமச்சந்திரன் மகன் சஞ்சய் 20; இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, அரை கிலோ, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இருவரையும் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களுடன் தொடர்புடைய ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சேகர் மகன் லோகேஷ் 26; விளத்துாரைச் சேர்ந்த ரமேஷ் மகன் நிவாஸ் 25; இருவரையும் சிறப்பு படை போலீசா் தேடி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, காட்டுமன்னார்கோவில் போலீசார் முகமது யூசப்அலி 23; சஞ்சய் 20; இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us