ADDED : மார் 07, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார், செல்லங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு, கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன்,21 என்பவரை போலீசார் ைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று, கோண்டூரில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராமு மகன் ராகவன், 25; என்பவரை புதுநகர் போலீசார் கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.