/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி இயங்கிய 2 பார்களுக்கு 'சீல்'
/
அனுமதியின்றி இயங்கிய 2 பார்களுக்கு 'சீல்'
ADDED : ஜூலை 30, 2024 04:51 AM

திட்டக்குடி: திட்டக்குடி அருகே அனுமதியின்றி இயங்கிய 2 பார்களை அதிரடியாக அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
திட்டக்குடி பகுதியில் அனுமதியில்லாமல் பார்கள் இயங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செந்தில்குமார், திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் நேற்று திட்டக்குடி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பெருமுளை டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி இரு இடங்களில் பார்கள் இயங்கி வருவதும், அதனை கோழியூர் சிலம்பரசன், மணிவண்ணன், சிறுமுளை ராஜா, மதுரை பாண்டிஸ்வரன் ஆகியோர் நடத்தி வருவது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அனுமதியின்றி இயங்கி வந்த 2 பார்களை 'சீல்' வைத்தனர். மேலும், சிலம்பரசன் உள்ளிட்ட 4 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.