ADDED : மார் 10, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளரை கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றபோது, பூதாமூர் மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது.
அங்கிருந்து 2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளர் பூதாமூர் இந்திரா நகர் சின்னபெருமாள் மகன் ஜெயபாண்டியன், 45, என்பவரை கைது செய்தனர்.