/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா விற்பனை 2 கடைகளுக்கு 'சீல்'
/
குட்கா விற்பனை 2 கடைகளுக்கு 'சீல்'
ADDED : செப் 11, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்,: விருத்தாசலத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன், பாலாஜி ஆகியோர் பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அக்கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும் மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.