/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டிற்கு ரயிலில் அனுப்பி வைப்பு மழையில் நனைந்து வீணாவதை தடுக்க முன்னேற்பாடு

ADDED : மே 24, 2024 03:47 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பருவமழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை தவிர்க்க 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் ஈரோடு குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் நவரை பட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அறுவடை செய்த நெல்லை நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடியாக கொள்முதல் செய்து நெய்வேலி மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் இயங்கி வரும் திறந்தவெளி குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நெல் மூட்டைகள் மரக்கட்டைகள் மற்றும் கற்கள் மீது அடுக்கி தார்ப்பாயால் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மழை பெய்து வரும் நிலையில், நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை தவிர்த்திட திறந்தவெளி குடோன்களில் உள்ள நெல் மூட்டைகளை ஈரோடு, சென்னை மற்றும் திருச்சி குடோன்களுக்கு அனுப்பி வைக்க நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டார்.
அதன்படி விருத்தாசலம் அடுத்த எருமனுார் சாலையில் உள்ள தற்காலிக குடோனில் இருந்து நேற்று 2,000 டன் நெல் மூட்டைகள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் ஈரோடு, சேனாதிபதிபாளையத்தில் உள்ள குடோனுக்கு் அனுப்பி வைக்கப்பட்டன.
அடுத்த கட்டமாக, 6,000 டன் நெல் மூட்டைகள் சென்னை, திருச்சி மாவட்டங்களில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.