/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.36 லட்சம் பணம் பறிமுதல்
/
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.36 லட்சம் பணம் பறிமுதல்
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.36 லட்சம் பணம் பறிமுதல்
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.36 லட்சம் பணம் பறிமுதல்
ADDED : ஏப் 05, 2024 06:23 AM
மரக்காணம் : வானுார் சட்டசபை தொகுதியில் ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.36 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வானுார் ஒன்றிய பொறியாளர் மகேந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர், நேற்று மதியம் 1:30 மணிக்கு, திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் கீழ்கூத்தப்பாக்கம் பஸ் நிலையம் அருகே வாகன சோதனை செய்தனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பயணித்த புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்த தனசேகரன், 32; என்பவர், உரிய ஆவணமின்றி, ரூ.1.64 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர்..
அதே போல், நிலை கண்காணிப்பு குழு 'பி' பிரிவு அதிகாரிகள் நேற்று மாலை 4:30 மணிக்கு, நல்லாவூர் உப்பவேலுார் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
அவ்வழியே பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த ஆட்சிபாக்கத்தை சேர்ந்த பிரசாந்த்,28; என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் இருந்த ரூ.72 ஆயிரத்து 89 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கண்காணிப்பாளர் இளவரசனிடம் ஒப்படைத்தனர்.

