/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 29 சவரன் நகை, பணம் திருட்டு
/
தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 29 சவரன் நகை, பணம் திருட்டு
தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 29 சவரன் நகை, பணம் திருட்டு
தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 29 சவரன் நகை, பணம் திருட்டு
ADDED : ஆக 08, 2024 12:24 AM

திட்டக்குடி:திட்டக்குடியில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 29 சவரன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி வதிஷ்டபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் பிரபு,29; விருத்தாசலத்தில் உள்ள தனியார் வங்கியில் பணி புரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுவிட்டு, மனைவி கமலேஸ்வரி மற்றும் 2 வயது மகன் உள்ளிட்டோர் துாங்கினர்.
நேற்று காலை எழுந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் தாழ்ப்பாள் உடைந்திருந்தது. அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த வளையல், ஆரம், நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 29 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விரல் ரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.