/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது
/
காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது
ADDED : மே 26, 2024 05:46 AM
மந்தாரக்குப்பம்: ஊமங்கலத்தில் காரில் குட்கா பொருட்களைக் கடத்திச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை ஊமங்கலம் பகுதியில் போலீசார் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டவேரா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், காரில் வந்தவர்கள் மந்தாரக்குப்பம் கடைவீதியைச் சேர்ந்த முகமது அப்துல்லா, 36; ஊத்தங்கால் கிழக்கு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், 32; மீனாட்சிபேட்டை, பட்ட தெருவைச் சேர்ந்த குமரேசன், 43; என தெரியவந்தது.
உடன் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 157 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.