/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3 முறை கணக்கு காட்ட வேண்டும்: வேட்பாளர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'
/
3 முறை கணக்கு காட்ட வேண்டும்: வேட்பாளர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'
3 முறை கணக்கு காட்ட வேண்டும்: வேட்பாளர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'
3 முறை கணக்கு காட்ட வேண்டும்: வேட்பாளர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'
ADDED : மார் 31, 2024 03:51 AM
கடலுார், : கடலுார் லோக்சபா தொகுதி வேட்பாளர்கள், தேர்தல் செலவின கணக்குகளை மூன்று முறை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
லோக்சபா தேர்தலில், கடலுார் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுதாக்கல் செய்த நாளிலிருந்து, தேர்தல் நாள் வரையிலான செலவின கணக்குகளை, காண்பிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் மூன்று முறை, தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கும், மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.எனவே, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஏப்., 5 மற்றும் 10, 15 ஆகிய தேதிகளில் நடக்கும் ஆய்வு கூட்டங்களில், சமர்ப்பிக்க வேண்டும்.
அன்றைய தினங்களில் தேர்தல் செலவு கணக்குகளை உரிய ஆவணங்களுடன் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.