/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் சிக்கிய கொள்ளையர்களிடம் 30 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பறிமுதல்

ADDED : ஜூலை 01, 2024 06:45 AM

புவனகிரி : புவனகிரி அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்ட கொள்ளையர்களிடம், 30 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த கீழமணக்குடி அக்ரஹார தெருவை சேர்ந்தவர் ரகுநாதன். கடந்த 28ம் தேதி நள்ளிரவு, இவரது வீட்டில் திருட முயன்ற 5 பேரை அப்பகுதியினர் பிடித்து, தர்ம அடி கொடுத்து புவனகிரி போலீசில் ஒப்படைத்தனர்.
புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் கடுகூரை சேர்ந்த சக்திவேல்,23; குமராட்சி அடுத்த வேட்டவலத்தை சேர்ந்த அன்பழகன்,67; காட்டுமன்னார்கோவில், காந்தியார் தெரு சுரேஷ், 46; சமயபுரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்த மதியழகன்,45; கம்மாபுரம் அடுத்த மும்முடிசோழகன் பகுதியை சேர்ந்த சுரேஷ்,35; என தெரியவந்தது.
அவர்கள் சிதம்பரம் டவுன், அண்ணாமலை நகர், புவனகிரி மற்றும் மருதுார் பகுதியில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. திருடிய சில பொருட்களை சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்ததாக தெரிவித்தனர்.
அவர்கள் கூறிய தகவலின்பேரில் பல்வேறு இடங்களிலிருந்து 3 கிலோ வெள்ளி, 30 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.