/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு 30,499 மாணவர்கள் எழுதினர்
/
மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு 30,499 மாணவர்கள் எழுதினர்
மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு 30,499 மாணவர்கள் எழுதினர்
மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு 30,499 மாணவர்கள் எழுதினர்
ADDED : மார் 06, 2025 01:59 AM

கடலுார்: பிளஸ் 1 பொதுத் தேர்வை, கடலுார் மாவட்டத்தில் 30,499 மாணவ, மாணவியர் எழுதினர்.
பிளஸ்1 அரசு பொதுத் தேர்வு நேற்று துவங்கியது, வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. நேற்று துவங்கிய தேர்வை, கடலூர் மாவட்டத்தில் 248 மையங்களில், 30,499 மாணவ, மாணவியர் எழுதினர். இதில், கடலுார் கல்வி மாவட்டத்தில் 135 பள்ளிகளில் 8,643 மாணவர்கள், 9,016 மாணவிகள் என 17,659 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 113 பள்ளிகளில் 6,664 மாணவர்கள், 6,176 மாணவிகள் என 12,840 பேரும் எழுதினர்.
தேர்வு நடக்கும் அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள் என 2,150 ஆசிரியர்கள், அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் ஆய்வு செய்தார்.