/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூலை 06, 2024 04:51 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கும், இளங்கலை பாடபிரிவுகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் கலந்து கொள்ள முதல்வர் சுரேஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் வரும் 9, 10 மற்றும் 11ம் தேதி வரை நடக்கிறது.
இதில் 9ம் தேதி பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கும், 10ம் தேதி பி.காம்., ; பி.பி.ஏ.,; பி.ஏ., வரலாறு, பொருளாதாரம், 11ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.
இந்த பொது கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் காலை 9:30 மணிக்கு வர வேண்டும். மேலும், கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை மற்றும் பேங்க் புக் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.