ADDED : ஆக 10, 2024 04:35 AM
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதியில் பசு மாடுகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி அரியசாமி, 72; இவருக்கு அம்மாபேட்டை காட்டுக்கொட்டாய் பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு பசுமாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 28ம் தேதி நிலத்திற்கு சென்றபோது, அங்கிருந்த 2 பசு மாடுகளை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் அம்மாபேட்டையைச் சேர்ந்த ராமன் மகன் ராஜேஷ், 42; கொளஞ்சி மகன் சரவணன், 28; பச்சமுத்து மகன் பச்சையாபிள்ளை,56; சின்னப்பன் மகன் கண்ணன் ஆகியோர் கூட்டாக மாடுகளை திருடி இறைச்சி கடையில் விற்றது தெரிய வந்தது.
அதன்பேரில் ராஜேஷ், சரவணன், பச்சையாபிள்ளை மற்றும் பசுமாடுகளை வாங்கிய மொய்தீன், 55; ஆகிய 4 பேரை கைது செய்து, ஒரு மாட்டை மீட்டு, கண்ணனை தேடி வருகின்றனர்.

