/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் முதல் வாக்காளர்கள் 41,673 பேரின் ஓட்டு யாருக்கு?: கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் தவிப்பு
/
கடலுாரில் முதல் வாக்காளர்கள் 41,673 பேரின் ஓட்டு யாருக்கு?: கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் தவிப்பு
கடலுாரில் முதல் வாக்காளர்கள் 41,673 பேரின் ஓட்டு யாருக்கு?: கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் தவிப்பு
கடலுாரில் முதல் வாக்காளர்கள் 41,673 பேரின் ஓட்டு யாருக்கு?: கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் தவிப்பு
ADDED : மார் 28, 2024 11:13 PM
கடலுார் கடலுார் லோக்சபா தொகுதியில் உள்ள 41,673 முதல் முறை வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு சாதகமாக இருக்கும் என அரசியல் கட்சியினர் கணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம் என, 2 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடலுார் லோக்சபா தொகுதியில் கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி (தனி) ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் 6,73,660 ஆண் வாக்காளர்கள், 6,89,899 பெண் வாக்காளர்கள், 91 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 13,63,650 பேர் இருந்தனர். தற்போது, ஆறு சட்டசபை தொகுதிகளிலும் 6,88,269 ஆண் வாக்காளர்கள், 7,12,909 பெண் வாக்காளர்கள், 212 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,01,390 பேர் உள்ளனர்.
இது கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் இடம்பெற்ற வாக்காளர்களைவிட 37,740 பேர் தற்போது கூடுதலாக உள்ளனர்.
இந்த ஆண்டு முதல்முறையாக 18 மற்றும் 19 வயதுடையவர்கள் 41,673 பேர் முதல் வாக்காளர்களாக உள்ளனர். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
நடப்பாண்டு லோக்சபா தேர்தலில் கட்சிகள் அணிமாறி போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க., பா.ஜ., ஆகிய கட்சிகள் 3வது அணியாக போட்டியிடுகின்றன.
அதனால் தமிழக லோக்சபா தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடலுார் தொகுதியை அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு தாரைவார்த்து விட்டன.
தி.மு.க., கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கும், அ.தி.மு.க., கூட்டணி கட்சியான தே.மு.தி.க., விற்கும் விட்டுக் கொடுத்துவிட்டன.
இவைகள் தவிர பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., கடலுார் தொகுதியில் போட்டியிடுகிறது.
பா.ம.க., வேட்பாளராக சினிமா பட இயக்குனர் தங்கர்பச்சான் களமிறங்குகிறார். அதேப்போல காங்., கட்சி சார்பில் விஷ்ணுபிரசாத், தே.மு.தி.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து போட்டியிடுகின்றனர்.
இதனால் கடலுார் லோக்சபா தொகுதியில் முன்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில், தற்போது கடலுார் தொகுதியில் உள்ள முதல் முறை வாக்காளர்களின் ஓட்டுக்கள் யாருக்கு சாதமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் தவித்து வருகின்றனர்.

