/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் 5 சவரன் தங்கச்செயின்ரூ.64 ஆயிரம் திருடிய இருவர் கைது
/
பண்ருட்டியில் 5 சவரன் தங்கச்செயின்ரூ.64 ஆயிரம் திருடிய இருவர் கைது
பண்ருட்டியில் 5 சவரன் தங்கச்செயின்ரூ.64 ஆயிரம் திருடிய இருவர் கைது
பண்ருட்டியில் 5 சவரன் தங்கச்செயின்ரூ.64 ஆயிரம் திருடிய இருவர் கைது
ADDED : ஜூலை 16, 2011 02:19 AM
கடலூர்:பண்ருட்டியில் ஐந்து சவரன் தங்கச் செயின் மற்றும் 64 ஆயிரம் ரூபாய்
பணம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த தெற்கு
சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி மணி மேகலை, 40.
இவர் நேற்று முன்தினம் உழவர் அட்டை வாங்க தனது தங்கையுடன் பண்ருட்டி
தாலுகா அலுவலகம் சென்றார்.
75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 5 சவரன் தங்கச்
செயினை பையில் வைத்து தலைமாட்டில் வைத்து அலுவலகம் முன் உள்ள மரத்தின் கீழ்
படுத்திருந்தார். கடைக்குச் சென்ற அவரது தங்கை வந்து பார்த்த போது நகைப்பை
திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில்
பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில்
ராஜாஜி சாலையில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது
அவ்வழியே சந்தேகிக்கும்படி வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.அதில் அவர்
செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டபட்டினம் தட்சணாமூர்த்தி, 45, என்றும், பண்ருட்டி
தாலுகா அலுவலகம் முன் பணம் திருடியதை ஒப்புக் கொண்டார். போலீசார் கைது
செய்து செயினை பறிமுதல் செய்தனர்.மற்றொரு சம்பவம்: பண்ருட்டி அடுத்த
ஆத்திரைக்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 27. இவருக்கு சொந்தமான லாரியை
உதயகுமார் கடந்த 13ம் தேதி ஓட்டினார். சென்னை சாலையில் பால் கடைக்கு
எதிரில் லாரியை நிறுத்திவிட்டு இருவரும் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த
போது டிரைவர் சீட்டுக்கு கீழே பெட்டியில் இருந்த 64 ஆயிரம் ரூபாய் பணம்
திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து பணம் திருடிய எல்.என்.,புரம் வையாபுரியை, 36, கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.