/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் பஸ் விபத்து 50 பயணிகள் தப்பினர்
/
விருதையில் பஸ் விபத்து 50 பயணிகள் தப்பினர்
ADDED : ஏப் 16, 2024 10:49 PM

விருத்தாசலம்,- விருத்தாசலத்தில் அரசு ஏசி பஸ், சாலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில், பயணிகள் தப்பினர்.
திருச்செந்துாரில் இருந்து விருத்தாசலம் வழியாக நேற்று அரசு ஏ.சி., பஸ் 50க்கும் மேற் பட்ட பயணிகளுடன் புதுச்சேரி நோக்கி நேற்று சென்றது.
அதிகாலை 4:30 மணியளவில் விருத்தாசலம் - கடலுார் சாலையில் சென்ற போது, விருத்தாசலம் மார்க் கெட் கமிட்டி அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளாது.இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக தப்பினர்.
இந்த விபத்து குறித்து, விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

