/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேப்பூரில் பதுக்கி வைத்த 73 காஸ் சிலிண்டர் பறிமுதல்
/
வேப்பூரில் பதுக்கி வைத்த 73 காஸ் சிலிண்டர் பறிமுதல்
வேப்பூரில் பதுக்கி வைத்த 73 காஸ் சிலிண்டர் பறிமுதல்
வேப்பூரில் பதுக்கி வைத்த 73 காஸ் சிலிண்டர் பறிமுதல்
ADDED : மார் 08, 2025 02:02 AM
வேப்பூர்: வேப்பூரில் கள்ள சந்தையில் விற்பதிற்காக பதுக்கி வைத்திருந்த 73 காஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேப்பூரில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து, கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட குற்றங்கள் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, சப்இன்ஸ்பெக்டர் ராபின் ஜெரால்ட் தலைமையிலான போலீசார், வேப்பூர் கூட்டுரோட்டிலுள்ள ஒரு தனியார் ஓட்டலில் சோதனை செய்தனர். அப்போது, ஓட்டலின் பின்புறத்தில் 73 காஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், வேப்பூரைச் சேர்ந்த பழனிக்குமார், 55; வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து, வணிக கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பழனிக்குமார் பதுக்கி வைத்திருந்த 73 காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து குற்றங்கள் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.