/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
/
எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
ADDED : மே 26, 2024 05:56 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனை, மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் சங்கம் சார்பில் எய்ட்சால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சிவசீலன் வரவேற்றார். முதன்மைக் குடிமை மருத்துவர் சாமிநாதன் திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.
மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி, மருத்துவ அலுவலர் தினகரன், செவிலிய கண்காணிப்பாளர் வெற்றிக்கொடி, சத்தியபாமா வாழ்த்தி பேசினர். ஆலோசகர்கள் தங்கமணி, குமார், தொல்காப்பியன், ஆய்வக நுட்புனர்கள் ஹரிபாஸ்கர், ஜெயந்தி, குமார், கீதா, கலாவதி, செவிலியர் சுதா, மருந்தாளுனர் பிரகாஷ் பங்கேற்றனர்.
அதில், எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உயிரிழந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசு மருத்துவமனை மைய ஆலோசகர் புஷ்பவல்லி நன்றி கூறினார்.