/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூதாட்டி தாக்கு தம்பதி மீது வழக்கு
/
மூதாட்டி தாக்கு தம்பதி மீது வழக்கு
ADDED : ஆக 08, 2024 11:42 PM
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே இட தகராறில் மூதாட்டியை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம், புதுவெண்ணைய்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகன் மணிகண்டன். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கலியபெருமாள் மகன் சிகாமணி என்பவருக்கும் மனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது.நேற்று முன்தினம் காலை, மணிகண்டனுக்கு சொந்தமான நிலத்தில் சிகாமணி டிராக்டரில் மண் கொட்டியுள்ளார். இதை தட்டிக்கேட்ட மணிகண்டன் தாய் சாரதாம்பாள், 60, என்பவரை திட்டி, தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில், சிகாமணி அவரது மனைவி சுந்தரி ஆகியோர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.