/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டலுக்கு சீல் வைக்க முயன்றதால் பரபரப்பு
/
ஓட்டலுக்கு சீல் வைக்க முயன்றதால் பரபரப்பு
ADDED : மார் 06, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார்- சிதம்பரம் சாலையில் இயங்கி வரும் பிரபல ஓட்டல் நிர்வாகம், மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் ரூ.5.30 லட்சம் வரி பாக்கி நிலுவையில் உள்ளது. பல முறை அறிவுறுத்தியும் செலுத்தாததால், நேற்று மாநகராட்சி வருவாய் அலுவலர் ரம்யா தலைமையில் ஊரியர்கள் வரி வசூலுக்கு சென்றனர்
. சரியான பதில் இல்லாததால், ஓட்டலுக்கு சீல் வைக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள், ஓட்டல் சங்க நிர்வாகிகள் திரண்டு மாநகராட்சி வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, நிலுவை தொகையில் ஒரு பகுதியை செலுத்துவதாக தெரிவித்ததால், ஓட்டலுக்கு சீல் வைக்கப்படுவதை கைவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.