/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூண்டு கிலோ ரூ. 400 விலை திடீர் உயர்வு
/
பூண்டு கிலோ ரூ. 400 விலை திடீர் உயர்வு
ADDED : செப் 02, 2024 09:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: காராமணிக்குப்பம் சந்தையில் பூண்டு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் நேற்று வாரச்சந்தை நடந்தது. இங்கு 200 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி கடை போட்டிருந்தனர். பெரிய வெங்காயம் கிலோ ரூ. 30, தக்காளி, 25, சின்ன வெங்காயம், 40, இஞ்சி, 50 என, விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பூண்டு மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பூண்டு விலை திடீர் உயர்வு சந்தைக்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.