/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் கம்பத்தில் மோதிய லாரி தீப்பிடித்து எரிந்து சாம்பல்
/
மின் கம்பத்தில் மோதிய லாரி தீப்பிடித்து எரிந்து சாம்பல்
மின் கம்பத்தில் மோதிய லாரி தீப்பிடித்து எரிந்து சாம்பல்
மின் கம்பத்தில் மோதிய லாரி தீப்பிடித்து எரிந்து சாம்பல்
ADDED : மே 29, 2024 07:15 PM

சிறுபாக்கம்:துாத்துக்குடி மாவட்டம், கீழ்தட்டாம்பாறையை சேர்ந்தவர் பெரியசாமி, 28. டிரைவரான இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து டிரைலர் லாரியில் இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு பெருந்துறைக்கு புறப்பட்டார்.
நேற்று மதியம் 12:45 மணியளவில், வேப்பூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியதும், லாரி தீப்பிடித்து எரிந்தது. டிரைவர் பெரியசாமி அதிஷ்டவசமாக தப்பினார்.
வேப்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரி முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.