/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
விருத்தாசலத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : மார் 28, 2024 04:22 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தி.மு.க., நகரசெயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அவைத் தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நகர துணை செயலாளர் நம்பிராஜன், குரு சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருத்தாசலம் நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் கலந்துகொண்டு, தேர்தல் பணி சம்பந்தமாக நிர்வாகிகளிடம் பேசினார்.
மாவட்ட பிரதிநிதி பாண்டியன், பொருளாளர் மணிகண்டன், சரவணன்,வழக்கறிஞர்கள் அருள்குமார், ரவிச்சந்திரன், மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில்,இந்தியா கூட்டணி உருவாகுவதற்கு காரணமான தி.மு.க.,தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.
விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்குபெரும் பிரசார பயணத்தில்,விருத்தாசலம் நகரம் சார்பில் திரளானோர் பங்கேற்பது. விருத்தாசலம் வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ராமு நன்றி கூறினார்.

