/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தென்பெண்ணை ஆற்றில் மதுபாட்டில், பிளாஸ்டிக் குப்பை குவியல்
/
கடலுார் தென்பெண்ணை ஆற்றில் மதுபாட்டில், பிளாஸ்டிக் குப்பை குவியல்
கடலுார் தென்பெண்ணை ஆற்றில் மதுபாட்டில், பிளாஸ்டிக் குப்பை குவியல்
கடலுார் தென்பெண்ணை ஆற்றில் மதுபாட்டில், பிளாஸ்டிக் குப்பை குவியல்
ADDED : ஜூன் 03, 2024 06:26 AM

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான, தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம், சென்னகேசவா மலையில் உற்பத்தியாகி, ஓசூர் வழியாக, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் 432 கி.மீ., துாரம் பயணம் செய்து, கடலுார் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இந்நிலையில், கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த தரைப்பாலம் பகுதியில் இரவு நேரங்களில் குடிப்பிரியர்கள், மது குடித்து வருகின்றனர். இவர்கள் காலி மதுபாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றில் துாக்கி வீசி செல்கின்றனர்.
இதனால், ஆற்றில் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, தென்பெண்ணை ஆற்றில் குவிந்துள்ள மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.