/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் நடு வழியில் நிறுத்தம்; சிதம்பரம் அருகே பரபரப்பு
/
ரயில் நடு வழியில் நிறுத்தம்; சிதம்பரம் அருகே பரபரப்பு
ரயில் நடு வழியில் நிறுத்தம்; சிதம்பரம் அருகே பரபரப்பு
ரயில் நடு வழியில் நிறுத்தம்; சிதம்பரம் அருகே பரபரப்பு
ADDED : மே 22, 2024 01:24 AM
சிதம்பரம்: சிதம்பரம் அருகே ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னையில் இருந்து நேற்று காலை திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில், மாற்றுத் திறனாளிகள் கோச்சில் சக பயணிகள் அமர்ந்திருந்தனர். இதனை மாற்றுத் திறனாளிகள் கண்டிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் நீடித்த நிலையில் காலை 11:00 மணி அளவில் ரயில் கிள்ளை-சிதம்பரம் இடையே ரயில்வே கேட் அருகே வந்தபோது மாற்றுத்திறனாளி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்த ரயிலை நிறுத்தினார்.
உடன் ரயில் பைலட் மற்றும் கார்டு ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் கோச்சிற்கு சென்று விசாரித்தனர். பின்னர், அபாய சங்கிலியை சரி செய்து 20 நிமிடம் தாமதமாக ரயில் சிதம்பரத்திற்கு புறப்பட்டது.
ரயில் சிதம்பரம் சென்றதும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மாற்றுத்திறனாளிகள் கோச்சில் இருந்த சக பயணிகளை இறக்கி, மாற்றுத்திறனாளிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

