ADDED : மே 06, 2024 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : தமிழகத்தில் தற்போதுள்ள கடும் வெயிலில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.இதனால் மின்வாரிய அதிகாரிகள் மின்பற்றாக்குறையை சமாளிக்க திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நடுவீரப்பட்டு டானாசாவடி பஸ்நிறுத்தம்,மற்றும் கிழக்கு தெரு பகுதியில் நேற்று பகலிலும் தெருவிளக்குகள் எரிந்த நிலையில் உள்ளது. இதுபோல் பல ஊராட்சிகளில் தெருவிளக்குகள் பகலிலும் எரிந்து வருகிறது.ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சிகளில் உள்ள தெருவிளக்குகளுக்கு தானியங்கி மூலம் தெருவிளக்குகள் எரியும் வகையில் அமைத்தால் தான்,இதுபோன்று மின்சாரம் வீண் விரயம் ஆகாது.