/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தந்தை இறந்த துக்கத்தில் தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி
/
தந்தை இறந்த துக்கத்தில் தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி
தந்தை இறந்த துக்கத்தில் தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி
தந்தை இறந்த துக்கத்தில் தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி
ADDED : மே 07, 2024 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் சூரப்பன்நாயக்கன்சாவடியை சேர்ந்தவர் வடிவேல் மகள் ராஜேஸ்வரி. கடலுார் புதுப்பாளையம் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். கடந்த மார்ச் 15ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு இயற்பியல் பாடப்பிரிவிற்கு தேர்வு நடந்தபோது, அவரது தந்தை வடிவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். ஆனால், தந்தை இறந்த துக்கத்திலும் ராஜேஸ்வரி தேர்வு எழுதினார்.
இந்நிலையில் நேற்று வெளியான பொதுத்தேர்வு முடிவில் மாணவி ராஜேஸ்வரி 474 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். தந்தை இறந்த நாளன்று நடந்த இயற்பியல் தேர்வில் 70 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.