/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே பாலம் பணியில் கீழே விழுந்து வாலிபர் பலி
/
ரயில்வே பாலம் பணியில் கீழே விழுந்து வாலிபர் பலி
ADDED : மே 08, 2024 12:30 AM
கடலுார்: கடலுார் அருகே, ரயில்வே மேம்பால பணியின் போது கீழே விழுந்த வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டம், பிசிலிகோக்கல் மாரியைச் சேர்ந்தவர் கபீர்உசேன் மகன் அபுகலாம், 19; இவர், விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பூண்டியாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியில அபுகலாம் ஈடுபட்டிருந்தார். அவர் இரும்பு பைப்புகளை துாக்கி சென்றபோது கால் தவறி கீழே விழுந்தார்.
தலையில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். விபத்து குறித்து, கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

