ADDED : ஜூன் 26, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், திருப்பாதிரிபுலியூர் தானம் நகரை சேர்ந்த சீத்தாராமன் மகன் செல்வகுமார், 27; அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் நாராயணன், 24; இருவரும் நேற்று முன்தினம் பைக்கில், போடி செட்டித்தெரு வழியாக சென்றனர். அப்போது, அந்த வழியாக தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதியது. கீழே விழுந்த செல்வகுமார் மீது லாரி சக்கரம் ஏறியதில், உடல் நசுங்கி இறந்தார்.
இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.