/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேக்வாண்டோ கலையில் அசத்தும் கிராமத்து மாணவி
/
தேக்வாண்டோ கலையில் அசத்தும் கிராமத்து மாணவி
ADDED : ஆக 08, 2024 12:32 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே கிராமத்தை சேர்ந்த விவசாயி வரதராஜன் மகள் ஜனனி, 18; டிரீம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், கராத்தே மற்றும் தேக்வாண்டோ கலை பயின்று வருகிறார். திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் கல்லுாரியில் இரண்டாமாண்டு படிக்கிறார்.
இவருக்கு, சிறு வயது முதலே தேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2016ல் விழுப்புரத்தில் நடந்த தேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். 2017 ல் திண்டிவனம், 2018 ல் திருப்பூர், 2019 ல் தூத்துக்குடி, 2023 ம் ஆண்டு கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார்.
இவரது இடைவிடாத வெற்றிகளை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தமிழக அரசால் ஜப்பான் நாட்டிற்கு 6 நாட்கள் கல்விச்சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.
பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு சாதனை படைத்து வரும் ஜனனியை மேலும் பல சாதனைகள் படைக்க கராத்தே பயிற்சியாளர் சென்சாய் ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர் சத்தியராஜ் மற்றும் பலர் பாராட்டினர்.