நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆராதனை விழா நேற்று துவங்கியது.
புவனகிரியில் ராகவேந்திரர் பிறந்த அவதார இல்லம் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. இங்கு, 37ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று அதிகாலை 5.00 மணிக்கு சுப்ரபாதம், வேத பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. இன்று (21ம் தேதி) புண்ணிய ஆராதனை், நாளை (22ம் தேதி) உத்தர ஆராதனை நடக்கிறது. சுவேத நதி தீர்த்தத்துடன், மந்திராலயம் மரபு படி, அபிஷேக, அலங்காரம், தீப ஆராதனை நடக்கிறது.

