/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பால் அடித்து முதியவர் கொலை வீராம்பட்டினத்தில் வாலிபர் கைது
/
கரும்பால் அடித்து முதியவர் கொலை வீராம்பட்டினத்தில் வாலிபர் கைது
கரும்பால் அடித்து முதியவர் கொலை வீராம்பட்டினத்தில் வாலிபர் கைது
கரும்பால் அடித்து முதியவர் கொலை வீராம்பட்டினத்தில் வாலிபர் கைது
ADDED : ஆக 17, 2024 03:34 AM

அரியாங்குப்பம்,: கோவில் திருவிழாவில், காணிக்கையை தராத முதியவரை கரும்பால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் வெள்ளிமலை, 60; நரிக்குறவர். இவர், புதுச்சேரி, அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கு நேற்று முன்தினம் வந்தார்.
இவரது உறவினர்கள், சிலர் கோவில் திருவிழாவிற்கு வளையல் மற்றும் பொம்மைகள் விற்பனை செய்ய வந்தனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், வெள்ளிமலை, சாமி வேடம் அணிந்து, கோவில் முன், நின்று கொண்டு அங்கு வருபர்களிடம் காணிக்கை வாங்கி கொண்டிருந்தார்.
அவரிடம் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீன்பிடி தொழில் செய்யும் வாலிபர், அஜித்குமார், 27, காணிக்கை பணத்தை கேட்டார். அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த, அஜித்குமார், அருகில் கரும்பு ஜூஸ் கடையில் இருந்த கரும்பை எடுத்து, வெள்ளிமலையை சரமாரியாக தாக்கினார்.
நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து, அரியாங்குப்பம், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர்.
முதியவர் ஆண்டுதோறும் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு வந்து சாமி வேடம் அணிந்து பொதுமக்களிடம் காணிக்கை வாங்குவார். காணிக்கை பணம் தராத ஆத்திரத்தில், போதையில் இருந்த அஜித்குமார், வெள்ளிமலையை கரும்பால் அடித்ததில், அவர், இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அஜித்குமாரை போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

