/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் கடலுார் தொகுதியில் தீவிர பிரசாரம்
/
பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் கடலுார் தொகுதியில் தீவிர பிரசாரம்
பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் கடலுார் தொகுதியில் தீவிர பிரசாரம்
பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் கடலுார் தொகுதியில் தீவிர பிரசாரம்
ADDED : ஏப் 08, 2024 05:55 AM

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் ஓட்டு சேகரித்தார்.
கடலுார் லோக்சபா தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். இவர், கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சிங்கிரிகுடி, துாக்கணாம்பாக்கம், களையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிரமாக ஓட்டு சேகரித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது, கடலுார் தொகுதியில் நிலவும் குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன்' என்றார்.
பா.ம.க., மாநில அமைப்பு தலைவர் தாமரைக்கண்ணன், மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தட்சணாமூர்த்தி, மாநில மாணவரணித் தலைவர் கோபிநாத், பா.ஜ., கடலுார் சட்டசபை தொகுதி அமைப்பாளர் வினோத் ராகவேந்திரன், அ.ம.மு.க., ஜெ., பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓ.பி.எஸ்., அணி ராமசாமி, த.மா.கா., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.