/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி பள்ளி மைதானத்தில் விடுதி கட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி எதிர்ப்பு

ADDED : ஆக 03, 2024 04:39 AM
திட்டக்குடி : திட்டக்குடி அரசு பள்ளி மைதானத்தில் விடுதி கட்டினால் போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க., தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசு ஆதிதிராவிடர் நலவிடுதி தி.இளமங்கலத்தில் இருந்தது.
பள்ளியிலிருந்து தொலைவில் இருந்ததால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பள்ளி மைதானத்தில் விடுதி கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை மீறி, பள்ளி மைதானத்தில் விடுதி கட்ட ஏற்பாடுகள் நடக்கிறது.
இந்நிலையில் நேற்று திட்டக்குடி வந்த பா.ம.க., தலைவர் அன்புமணியை சந்தித்த, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மைதானத்தை பாதுகாக்க கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லாத நிலையில், திடக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பழமையான மைதானத்தை அழித்து விடுதி கட்டுவதை பா.ம.க., கண்டிக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கின்றனர். அதனையும் மீறி அரசு விடுதி கட்ட முயற்சித்தால், பா.ம.க., கடுமையான போராட்டத்தை நடத்தி தடுத்து நிறுத்தும். விடுதி தேவைதான். விளையாட்டு மைதானத்தில் கட்டக்கூடாது. வேறு பகுதியில் கட்டுங்கள் என்றார்.