/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் ஆம் ஆத்மி கண்டன ஆர்ப்பாட்டம்
/
கடலுாரில் ஆம் ஆத்மி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 24, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஞானராஜ் தலைமை தாங்கினார். மாநில தொழில்நுட்ப பிரிவு பாக்கியராஜ், மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், சக்தி ஆனந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், அமலாக்கத் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் வெங்கடேசன், சக்தி, மணிவண்ணன், செந்தில், வெற்றி, ஆசைத்தம்பி, ஏகாம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

