ADDED : செப் 04, 2024 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வழிப்பறி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியில் 2018ம் ஆண்டு பைக்கில் சென்றவரை வழிமறித்து பணம் பறித்த வழக்கில், சுந்தரவாண்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் உதயகுமாரை,23; என்பவரை நெல்லிக்குப்பம் போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த உதயகுமார், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல், கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, நெல்லிக்குப்பம் போலீசார், உதயகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.