/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'என் வாக்கு, என் உரிமை' உறுதிமொழி ஏற்பு
/
'என் வாக்கு, என் உரிமை' உறுதிமொழி ஏற்பு
ADDED : ஏப் 08, 2024 05:51 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பக்தர்களுக்கு லோக்சபா தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா, ஆய்வர் கோவிந்தசாமி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கினர்.
அப்போது, அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். நுாறு சதவீத ஓட்டளிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், என் வாக்கு, என் உரிமை என்ற வாசகத்தில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி, உறுதிமொழி ஏற்றனர்.
மேலும், கோவில் வளாகத்தில் தேர்தல் சம்பந்தமாக அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்டில் பக்தர்கள் பலர் செல்பி எடுத்து கொண்டனர்.

