/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
/
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூன் 13, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்த்திரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணைவேந்தர் கதிரேசன், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி வாசிக்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதியேற்றனர்.
பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் மற்றும் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.