/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சுரங்கத்தில் விபத்து டோசரில் சிக்கி தொழிலாளி சாவு
/
என்.எல்.சி., சுரங்கத்தில் விபத்து டோசரில் சிக்கி தொழிலாளி சாவு
என்.எல்.சி., சுரங்கத்தில் விபத்து டோசரில் சிக்கி தொழிலாளி சாவு
என்.எல்.சி., சுரங்கத்தில் விபத்து டோசரில் சிக்கி தொழிலாளி சாவு
ADDED : ஆக 07, 2024 06:26 AM

நெய்வேலி : நெய்வேலி, என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் டோசரில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், வடலுார் வள்ளலார் நகரில் வசித்து வந்தவர் அமாவாசை மகன் குழந்தைவேலு,39; நெய்வேலி என்.எல்.சி., முதல் சுரங்கம் -1ஏ.,வில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஆனந்தவள்ளி, 32; என்ற மனைவியும் சசிதா,11; இனியா,9; சாதனா,5; ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
குழந்தைவேலு நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வேலைக்கு சென்றவர் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் பணியிடத்தில் இறந்து கிடந்துள்ளார்.
என்.எல்.சி., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், டோசரில் சிக்கி அவர் இறந்தது தெரிய வந்தது.
இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குழந்தைவேலுவின் மனைவி மற்றும் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி., சுரங்கங்களின் மனிதவளத் துறை துணை பொது மேலாளர் அறிவு மற்றும் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இறந்தவர் மனைவிக்கு என்.எல்.சி.,யில் நிரந்தர வேலை மற்றும் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க என்.எல்.சி., நிர்வாகம் முன்வந்தது.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடலை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.