/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் சாதனையாளர்கள் தினவிழா
/
பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் சாதனையாளர்கள் தினவிழா
பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் சாதனையாளர்கள் தினவிழா
பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் சாதனையாளர்கள் தினவிழா
ADDED : பிப் 22, 2025 10:12 PM

பண்ருட்டி : பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 45வது சாதனையாளர்கள் தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஜான்டூயி கல்விக்குழும தலைவர் வீரதாஸ்தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஜெயசித்ரா, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சக்கரவர்த்தி, மாவட்ட வேளாண் அலுவலர் வேல்முருகன்கலந்து கொண்டனர்.
விழாவில் 2024-25ம் கல்வியாண்டில் நடந்த தேர்வுகளில் முதல், இரண்டாம் மதிப்பெண்கள் பெற்ற மற்றும் முழு வருகை பதிவு உள்ள மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்ள், கேடயம் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஜான்டூயி கல்விக்குழும முதுநிலை முதல்வர் வாலண்டினா லெஸ்லி , இணை செயலாளர் நிட்டின் ஜோஷ்வா , பள்ளியின் முதல்வர் மணிகண்டன், தலைமையாசிரியர் கனகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.