/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே சுரங்கப்பாதையில் பேரிகார்டு வைக்க நடவடிக்கை தேவை
/
ரயில்வே சுரங்கப்பாதையில் பேரிகார்டு வைக்க நடவடிக்கை தேவை
ரயில்வே சுரங்கப்பாதையில் பேரிகார்டு வைக்க நடவடிக்கை தேவை
ரயில்வே சுரங்கப்பாதையில் பேரிகார்டு வைக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 12, 2024 01:49 AM

கடலுார் : கடலுாரில் ரயில்வே சுரங்கப்பாதையில் விபத்தை தடுக்கும் வகையில் பேரிகார்டுகள் முழுமையாக வைக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்ந வாகனங்கள் சுரங்கப்பாதையில் உள்ளே செல்லும் மற்றும் வெளியில் செல்லும் பகுதிகளில் எதிர் திசையில் ராங் ரூட்டில் செல்கின்றன. இதனால், அங்கு அடிக்கடி சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இங்கு விபத்தை தடுக்கும் வகையில், பஸ் நிலையம் எதிரில் உள்ள சுரங்கப்பாதை பகுதியில் சிறிது துாரத்திற்கு போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகள் வைத்துள்ளனர். ஆனாலும், வாகன ஓட்டிகள் ராங் ரூட்டில் செல்வது தொடர்ந்து வருகிறது.
எனவே, ராங் ரூட்டில் செல்வதை தடுக்க ரயில்வே சுரங்கப்பாதையில் முழுவதும் பேரிகார்டுகள் வைக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.