/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
/
ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
ADDED : மே 26, 2024 05:59 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், இன்று வைகாசி மாத தேரோட்டம் நடக்கிறது.
இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை உற்சவ மூர்த்தி பல்லக்கிலும், இரவு அலங்கரித்த ஹம்ச வாகனம், அனுமன், நாகம், கருடன், யானை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, முத்துப்பல்லக்கில் சுவாமி அருள்பாலித்தார். நேற்று காலை பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும் ஆதிகேசவ பெருமாள் வீதியுலா நடந்தது. இன்று காலை 6:00 மணியளவில், தேரோட்டம் நடக்கிறது.
இதற்காக, காலை 5:30 மணியளவில் தேரடியில் சிறப்பு பூஜைகளுடன் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், ஆதிகேசவப் பெருமாள் தேரோடும் வீதிகள் வழியாக உலா வந்து அருள்பாலிக்கிறார். நாளை இரவு தீர்த்தவாரி நடக்கிறது.