/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒப்புக்கென இயங்கும் போலீஸ் நிலையம்
/
ஒப்புக்கென இயங்கும் போலீஸ் நிலையம்
ADDED : ஆக 28, 2024 04:15 AM
மாவட்டத்தின் கடைக்கோடியில், சிவபெருமான் நோய் தீர்க்கும் மருத்துவராக அருள்புரியும் ஊரில் உள்ள போலீஸ் நிலையம் ஒப்புக்கென இயங்கும் நிலை உள்ளது.
கடந்த சில மாதங்களில் இக்காவல்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் ஒரேயொரு வழக்கு மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகரின் தீராத பிரச்னையாக உள்ள கஞ்சாவை கட்டுப்படுத்தவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு அதிகாரிகளுக்குள் இணக்கம் இல்லாத நிலையும் உள்ளதாக சக போலீசாரே புலம்புகின்றனர். எனவே, மாவட்ட காவல்துறை தலையிட வேண்டும் என, அப்பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

